/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அசோக் லேலண்ட் நிறுவன தொழிலாளர்கள் உண்ணாவிரதம்அசோக் லேலண்ட் நிறுவன தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
அசோக் லேலண்ட் நிறுவன தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
அசோக் லேலண்ட் நிறுவன தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
அசோக் லேலண்ட் நிறுவன தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
ADDED : ஜூலை 11, 2024 12:06 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியில் அசோக் லேலண்ட் யூனிட் - 1 இயங்குகிறது.
இங்கு, 450 நிரந்தர தொழி-லாளர்களும், குமுதேப்பள்ளியிலுள்ள யூனிட் - 2 ல், 1,650 நிரந்தர தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர். அசோக் லேலண்ட் எம்-பிளாயீஸ் யூனியன் தலைவராக கடந்த, 2022 அக்., முதல் குசேலர் உள்ளார். அவரிடம், தொழிலாளர்களின் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் முன்வைத்தனர்.ஆனால் அவர், அதை நிறைவேற்றி கொடுக்கவில்லை என கூறியும், அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், மைக்கேல் அணியிலுள்ள தொழிலாளர் முன்னணி, வெங்கட்-ராமன் அணியிலுள்ள தொழிலாளர் பாதுகாப்பு பேரவை மற்றும் அண்ணா தொழிற்சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ள அசோக் லேலண்ட் தொழிலாளர்கள், யூனிட் - 1 மற்றும் யூனிட் - 2 முன்பு நேற்று காலை, 7:30 முதல், மாலை, 4:30 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊதிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளதால், அதற்கு முன்பாக அசோக் லேலண்ட் எம்பிளாயீஸ் யூனியன் தேர்-தலை நடத்த வலியுறுத்தினர்.