/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 13, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை
வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர், விதிமுறைகளை பின்பற்றி, இணையதளத்தின் வாயிலாக, ஊராட்சி வரி ரசீது, உரிமம் கோரும் இடத்தின் வரைபடம், கட்டட வரி ரசீது, ஒப்பந்த பத்திரம் உள்ளிட்ட தேவைப்படும் ஆவணங்களுடன், 600 ரூபாய் வங்கியில் செலுத்திய சலான் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தற்காலிக பட்டாசு கடை வைப்போர் கல், தார்சு கட்டடங்களில் கடை வைக்க வேண்டும். கடைகளுக்கு இடையே முறையான இடைவெளி இருக்க வேண்டும். எதிரெதிரில் பட்டாசு கடைகள் அமைக்க கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறி கடை வைத்தால் சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
இத்தகவலை, கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.