/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 27, 2025 01:08 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரி
யின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதை பொருள் எதிர்ப்புக்குழு இணைந்து, போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை நேற்று நடத்தியது.
மதுவிலக்கு அமலாக்கத்துறை ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம், டி.எஸ்.பி., மகாலட்சுமி ஆகியோர், போதை பொருளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து, மாணவியருக்கு எடுத்துக்கூறி, பேரணியை துவக்கி வைத்தனர். பேரணி, கல்லுாரியில் துவங்கி, ராயக்கோட்டை சாலை வழியாக மேம்பாலம் வரை சென்று பின்னர் கல்லுாரியை அடைந்தது. இதில், கல்லுாரி முதல்வர் கீதா, பேராசிரியர்கள், போலீசார் மற்றும் மாணவியர்பங்கேற்றனர்.
பேரணியை தொடர்ந்து, போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். முன்னதாக கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் லாவண்யா வரவேற்றார். மதுவிலக்கு அமலாக்கத்துறை டி.எஸ்.பி., மகாலட்சுமி, எஸ்.ஐ., அமுதா ஆகியோர், போதை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும், போதை பொருட்களின் விளைவுகள் குறித்து மாணவியரிடம் பேசினர். தொடர்ந்து, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர். உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியர் கனகலட்சுமி
நன்றி கூறினார்.