/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிராமத்திற்குள் புகுந்து ஹாயாக வலம் வந்த யானைகிராமத்திற்குள் புகுந்து ஹாயாக வலம் வந்த யானை
கிராமத்திற்குள் புகுந்து ஹாயாக வலம் வந்த யானை
கிராமத்திற்குள் புகுந்து ஹாயாக வலம் வந்த யானை
கிராமத்திற்குள் புகுந்து ஹாயாக வலம் வந்த யானை
ADDED : ஜூலை 13, 2024 12:44 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, கிராமத்திற்குள் புகுந்து சாலையில் ஹாயாக உலா வந்த ஒற்றை யானையால், கிராம மக்கள், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்-கோட்டை வனச்சரக பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இதில், ஆலள்ளி காப்புக்காட்டில் கூட்டத்துடன் சேராமல், கடந்த சில மாதங்களாக ஒற்றை ஆண் யானை சுற்றித்திரிகிறது. இது அடிக்கடி வனப்பகு-தியை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களில் புகுந்து பயிர்-களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை, ஆலள்ளி கிரா-மத்தில் புகுந்து, சாலையில் ஹாயாக நடந்து சென்றது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, வாகனங்களை திருப்பி கொண்டு உயிர் பிழைக்க தப்பி சென்றனர். வீடுகளின் முன் நின்றிருந்த மக்கள் பீதியடைந்து, ஓடினர்.
நீண்ட நேரமாக ஆலள்ளி கிராமத்தில் உலா வந்த யானையை, தாரை, தப்பட்டை அடித்து மக்கள் விரட்டினர். நீண்ட நேரத்திற்கு பின், வனப்பகுதி நோக்கி ஒய்யாரமாக யானை நடந்து சென்றது. வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானையால், ஆலள்ளி, நெல்லுகுந்தி, அரசச்சூர், கூச்சுவாடி, நெமிலேரி, சாலி-வாரம் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் இரவில் வெளியே வர வேண்டாம் என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் அல்லது கர்நாடகா மாநி-லத்திற்கு விரட்ட வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*யானையுடன் செல்பி
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்-செட்டி செல்லும் சாலையின் இருபுறமும் வனப்பகுதி உள்ளது. நேற்று மதியம், 3:00 மணிக்கு அஞ்செட்டி திருமுடுக்கான் கொண்டை ஊசி வளைவு இறக்கத்தை தாண்டி, ஏரி அருகே சாலையில் நீண்ட நேரமாக ஒற்றை யானை சாலையில் நின்றிருந்-தது. சாலையில் யானை நின்றதால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். மாலை, 4:00 மணி வரை சாலையி-லேயே யானை நின்றதால், தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி சாலை இருபுறமும் பஸ், கார், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன. யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் போக்கு-வரத்து சீரானது. இதற்கிடையே, வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர், ஆபத்தை உணராமல் யானையுடன் மொபைல்போனில் செல்பி எடுக்க முயன்றனர். அப்போது திடீரென யானை இளைஞர்களை நோக்கி பிளிறியபடி விரட்டியது. இதனால் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.