ADDED : ஜூன் 22, 2025 01:00 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில் காவேரிப்பட்டணம் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட அம்மா பேரவை செயலாளர், மாதையன் தலைமை வகித்தார். அம்மா பேரவை செயலாளர் கேசவன் வரவேற்றார். கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்து,
ஆலோசனைகள் வழங்கினார்.இளைஞர் நலன் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.