/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றி செல்லும்: கட்சியினர் கொண்டாட்டம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றி செல்லும்: கட்சியினர் கொண்டாட்டம்
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றி செல்லும்: கட்சியினர் கொண்டாட்டம்
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றி செல்லும்: கட்சியினர் கொண்டாட்டம்
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றி செல்லும்: கட்சியினர் கொண்டாட்டம்
ADDED : மே 29, 2025 01:20 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அசோக்குமார்
எம்.எல்.ஏ.,வின் வெற்றியை எதிர்த்து, தி.மு.க., வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி ஐந்து ரோடு ரவுண்டானா பகுதியில், அ.தி.மு.க., நகர செயலாளர் கேசவன் தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், அமைப்புசாரா ஓட்டுனரணி ஆஜி, மாணவரணி மாவட்ட செயலாளர் ராகுல் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நீதிமன்ற தீர்ப்பு குறித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் கூறுகையில், ''என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் முறையான தீர்ப்பு வழங்கியுள்ளது. இது எனக்கான வெற்றியல்ல, கிருஷ்ணகிரி தொகுதி மக்கள் மற்றும் எனக்கு ஓட்டளித்த மக்களுக்கான வெற்றி,'' என்றார்.