ADDED : மே 28, 2025 01:32 AM
சூளகிரி :சூளகிரி வட்டார வேளாண் துறையின் அட்மா திட்டம் சார்பில், சூளகிரி, சிம்பில்திராடி, அத்திமுகம் ஆகிய கிராமங்களில், வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து துவக்கி வைத்தார். வேளாண் அலுவலர் ரஞ்சிதா, துணை வேளாண் அலுவலர் பழனி, உதவி வேளாண் அலுவலர்கள் தமிழ்ச்செல்வி, வள்ளியம்மாள், முனிராஜ், உதவி விதை அலுவலர் தமிழ்வேந்தன், வேளாண் துறையின் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து, ஜெகதேவி விநாயகா கோலாட்ட கலை குழு சார்பில், உங்களை தேடி வேளாண்மை, விவசாயிகளுக்கான தனி அடையாள எண், பிரதமரின் கவுரவ நிதி திட்டம், வேளாண் சார்ந்த திட்டங்கள், அரசு வழங்கும் மானியங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து, கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.