ADDED : ஜன 06, 2024 07:17 AM
தொப்பூர்: கர்நாடகாவில் இருந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சாம்பல் பூசணி ஏற்றிக் கொண்டு நேற்று லாரி ஒன்று, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னே சென்று கொண்டிருந்த கார், கன்டெய்னர் லாரி மீது மோதி, கார் மீது லாரி கவிழ்ந்தது. இதில் காரில் சிக்கிய ஓசூரை சேர்ந்த குபேந்திரன், 58, உமாமகேஸ்வரி, 55, சாய்ராம், 25 மற்றும் விபத்தில் காயமடைந்த கன்டெய்னர் லாரி டிரைவர் மகேஸ்வரன், 42, மாற்று டிரைவர் சுப்பிரமணி ஆகியோரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.