/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம் சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்
சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்
சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்
சூறாவளி காற்றுடன் கனமழை சாலையில் விழுந்த புளியமரம்
ADDED : மே 25, 2025 12:53 AM
போச்சம்பள்ளி,போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில், நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. மீண்டும் இரவு, 9:00 மணிக்கு மேல் போச்சம்பள்ளியில் காற்றுடன் மழை பெய்த நிலையில், தர்மபுரி செல்லும் சாலையில், புதுமோட்டூர் பகுதியில், சாலையோரத்தில் இருந்த புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது.
இதனால், திருப்பத்துார் - -தர்மபுரி சாலையில் இரவு, 10:00 மணி முதல், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியிலுள்ள மக்கள் மற்றும் போச்சம்பள்ளி போலீசார், சாலையில் விழுந்த புளியமரத்தை அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.