ADDED : மே 30, 2025 01:08 AM
கிருஷ்ணகிரி :பர்கூர் அடுத்த மட்டாரப்பள்ளியை சேர்ந்தவர் திம்மராயன், 35, கூலித்தொழிலாளி. கடந்த, 27ல், பண்டசீமனுார் விநாயகர் கோவில் அருகில் அரசமரத்தில் ஏறி கிளைகளை வெட்டிய போது, தவறி விழுந்தார்.
படுகாயமடைந்த திம்மராயன், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.