/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரிதீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி
தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி
தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி
தீப்பிடித்து எரிந்த கன்டெய்னர் லாரி
ADDED : ஜூலை 10, 2024 05:56 PM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியில் இருந்து, தமிழக எல்லையில் உள்ள கொத்தகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு இன்று(ஜூலை 10) 40 டி.வி.எஸ்., ஜூப்பிட்டர் மொபட்டை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி சென்றது.
கெலமங்கலத்தை தாண்டி பைரமங்கலம் கூட்ரோடு அருகே சென்ற போது திடீரென லாரியில் தீப்படித்தது. டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். ஆனால், லாரியில் இருந்த 40 மொபட்டுகளும் தீயில் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.