ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
ஓசூர்: ராயக்கோட்டை அருகே உள்ளுகுறுக்கையை சேர்ந்த, 8 வயது சிறுவன், ராயக்கோட்டையில் கெலமங்கலம் சாலையிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 3ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று முன்தினம் இப்பள்ளி ஆசிரியை தன்யவர்ஷினி, 22, என்பவர், பள்ளியில் தேர்வு நடத்தினார். இதில் சரியாக தேர்வு எழுதாத மாணவனை தடியால் ஆசிரியை அடித்ததில், மாணவனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக, ராயக்-கோட்டை போலீசில் மாணவனின் தாய் புகார் செய்தார். ஆசிரியை தன்யவர்ஷினி மீது வழக்-குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.