/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மணல், எம்.சாண்ட் கடத்திய 7 லாரிகள் பறிமுதல் மணல், எம்.சாண்ட் கடத்திய 7 லாரிகள் பறிமுதல்
மணல், எம்.சாண்ட் கடத்திய 7 லாரிகள் பறிமுதல்
மணல், எம்.சாண்ட் கடத்திய 7 லாரிகள் பறிமுதல்
மணல், எம்.சாண்ட் கடத்திய 7 லாரிகள் பறிமுதல்
ADDED : மே 22, 2025 01:23 AM
கிருஷ்ணகிரி,ஆலப்பட்டி ஆர்.ஐ., சீனிவாசன் சின்ன பெல்லாரம்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில் ஒரு யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது-. புகார் படி கே.ஆர்.பி., டேம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து,
விசாரிக்கின்றனர்.
வடமலம்பட்டி வி.ஏ.ஓ., பழனிவேல் மற்றும் அலுவலர்கள் அங்கம்பட்டி கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 6 யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து பழனிவேல் அளித்த புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
சிங்காரப்பேட்டை வி.ஏ.ஓ., ஆனந்தன் தலைமையில் அதிகாரிகள் கோவிந்தாபுரம் கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து ஆனந்தன் அளித்த புகார்படி, சிங்காரப்பேட்டை போலீசார் லாரியை பறிமுதல் செய்து
விசாரிக்கின்றனர்.
*ஓசூர் அடுத்த எஸ்.முதுகானப்பள்ளி அருகே, மத்திகிரி ஆர்.ஐ., தர்மன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த, 3 டிப்பர் லாரிகளில் அனுமதி சீட்டின்றி, கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளிக்கு தலா, 6 யூனிட் எம்.சாண்ட் மண்ணை கொண்டு செல்வது தெரிந்தது. லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்
பதிந்து, லாரிகளின் டிரைவர்கள், உரிமையாளர்களை தேடி
வருகின்றனர்.
கெலமங்கலம் செந்தில் நகரிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே, போடிச்சிப்பள்ளி வி.ஏ.ஓ., வினோத் மற்றும் வருவாய்த்துறையினர் நடத்திய வாகன சோதனையில், 2 யூனிட் எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கெலமங்கலம் போலீசார்
விசாரிக்கின்றனர்.