/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல், மண் கடத்த முயற்சி 3 வாகனங்கள் பறிமுதல் கல், மண் கடத்த முயற்சி 3 வாகனங்கள் பறிமுதல்
கல், மண் கடத்த முயற்சி 3 வாகனங்கள் பறிமுதல்
கல், மண் கடத்த முயற்சி 3 வாகனங்கள் பறிமுதல்
கல், மண் கடத்த முயற்சி 3 வாகனங்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 26, 2025 01:24 AM
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த காட்டேரி வி.ஏ.ஓ., பழனிசாமி மற்றும் அலுவலர்கள், வெப்பாலம்பட்டி பகுதி திருப்பத்துார் - சேலம் சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது.
இது குறித்து வி.ஏ.ஓ., காட்டேரி புகார் படி, ஊத்தங்கரை போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
சிங்காரப்பேட்டை வி.ஏ.ஓ., தினேஷ்குமார் மற்றும் அலுவலர்கள்
திப்பம்பட்டி ஏரிக்கரை அருகில் ரோந்து சென்றனர். அங்கு நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. ஊத்தங்கரை போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
* போச்சம்பள்ளி அடுத்த, புதுமோட்டூரில், மத்துாரிலிருந்து, அரூருக்கு டிம்பர் லாரியில் அனுமதியின்றி, 10 யூனிட் ஜல்லி எடுத்து சென்றனர். போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, வாகனத்தை பறிமுதல் செய்து போச்சம்பள்ளி போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் லாரி டிரைவர் மற்றும் அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.