ADDED : ஜூன் 11, 2025 01:44 AM
ஓசூர் ஓசூர் அருகே, திப்பாளம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத், 30. கூலித்தொழிலாளி; இவரது மனைவி சுமா, 27. இவர்களது, 3 மாத கைக்குழந்தை தன்விக். கொத்தகொண்டப் பள்ளியிலுள்ள தாய் வீட்டில் குழந்தையுடன் சுமா தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, குழந்தை தன்விக் இருமுறை வாந்தி எடுத்துள்ளான். அதிகாலை, 5:30 மணிக்கு சுயநினைவின்றி கிடந்த குழந்தை உயிரிழந்தது. மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.