இடி தாக்கி 21 ஆடுகள், பசு மாடு பலி
இடி தாக்கி 21 ஆடுகள், பசு மாடு பலி
இடி தாக்கி 21 ஆடுகள், பசு மாடு பலி
ADDED : மார் 24, 2025 07:10 AM
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் அருகே என்.புதுார் கிராமத்தை சேர்ந்த அரியகவுண்டர் மனைவி பழனியம்மாள், 45; வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தகர கொட்டகையில் அடைத்து விட்டு துாங்க சென்றார்.
இரவு, 9:30 மணிக்கு மேல் இடியுடன் கனமழை பெய்தது. அப்போது தகர கொட்டகையின் மீது இடி தாக்கியதில், 21 ஆடுகள் பலியாகின. இதன் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய். அதேபோல் ராஜப்பா மனைவி கோவிந்தம்மாளுக்கு சொந்தமான, 50,000 ரூபாய் மதிப்புள்ள கறவை மாடு ஒன்றும் பலியானது. வருவாய்த்துறையினர் மற்றும் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். நாட்றாம்பாளையம் கால்நடை மருத்துவர் விஜய், ஆடுகள் மற்றும் கறவை மாட்டை நேற்று காலை பிரேத பரிசோதனை செய்தார்.