Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா

பி.எம்.சி., டெக் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா

ADDED : மே 26, 2025 04:04 AM


Google News
ஓசூர்: ஓசூர் அருகே, கோனேரிப்பள்ளியில் இயங்கும் பெருமாள் மணி-மேகலை இன்ஜினியரிங் கல்லுாரியில், 20வது பட்டமளிப்பு விழா நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவன தலைவர் குமார் தலைமை வகித்தார்.

விசாகப்பட்டினம் கடல்சார் மற்றும் கப்பல் கட்டுமான நிறுவ-னத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி அதிகாரி சேதுமாதவன், அண்ணா பல்கலை அளவில் தரவரிசையில் இடம் பிடித்து பதக்கம் பெற்ற, 11 பேர் உட்பட, 533 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ''உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஏ.ஐ., தொழில்நுட்பம், மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும். தகவல் தொழில்நுட்பம், 5 முதல், 10 ஆண்டுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றார் போல் மாணவ, மாணவியர் தங்களது திறமை-களை வளர்த்து கொண்டு, தலைமை பண்புடன் செயல்பட்டால் வாழ்வில் முன்னேறலாம்,'' என்றார்.பி.எம்.சி., டெக் கல்வி நிறுவன செயலாளர் மலர், அறங்கா-வலர் சசிரேகா, இயக்குனர்கள் சுதாகரன், சரவணன், டீன் ரவிச்சந்-திரன், முதல்வர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us