Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/முன்மாதிரி கிராமங்கள் உருவாக்க அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி

முன்மாதிரி கிராமங்கள் உருவாக்க அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி

முன்மாதிரி கிராமங்கள் உருவாக்க அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி

முன்மாதிரி கிராமங்கள் உருவாக்க அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி

கிருஷ்ணகிரி: முன்மாதிரி கிராமங்களை உருவாக்க, அரசு அலுவலர்களுக்கு, 2 நாள் பயிற்சி நேற்று துவங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பஞ்சாயத்துகளுக்கான வளர்ச்சி குறியீடுகள் அடிப்படையில், முன்மாதிரி கிராமங்களை உருவாக்க, வட்டார அளவில், வேளாண், தோட்டக்கலை, சுகாதாரம், பள்ளிக்கல்வி, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தை சேர்ந்த அலுவலர்களுக்கு, 2 நாள் பயிற்சி நேற்று துவங்கியது. பஞ்சாயத்துகளுக்கான மாவட்ட வள மைய அலுவலகத்தில் இப்பயிற்சியை, பஞ்., உதவி இயக்குனர் மகாதேவன் துவக்கி வைத்து பேசினார். அலுவலர்கள் சிலம்பரசன், ஆயிசா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.இதில், கிராம பஞ்., வளர்ச்சி திட்டம் தயாரித்தல், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான, 9 கருப்பொருட்கள், கிராம பஞ்., வளர்ச்சி குறியீட்டின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள், கிராம பஞ்சாயத்துகளை தரவரிசை படுத்துவதில் அலுவலர்களின் பொறுப்புகள், உள்ளூர் அளவில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்த வேண்டிய, நிதி இல்லா செயல்பாடுகள் மற்றும் குறைந்த நிதி தேவைப்படும் செயல்பாடுகள் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது.பஞ்சாயத்துகளுக்கான, மாவட்ட வள மைய அலுவலர் நிக்கோலா பிரகாஷ், பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us