/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 150 ஆண்டுகளாக வசித்தும் பட்டா இல்லை என புகார் 150 ஆண்டுகளாக வசித்தும் பட்டா இல்லை என புகார்
150 ஆண்டுகளாக வசித்தும் பட்டா இல்லை என புகார்
150 ஆண்டுகளாக வசித்தும் பட்டா இல்லை என புகார்
150 ஆண்டுகளாக வசித்தும் பட்டா இல்லை என புகார்
ADDED : மார் 18, 2025 02:05 AM
150 ஆண்டுகளாக வசித்தும் பட்டா இல்லை என புகார்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த, கீழ்சோமார்பேட்டையை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட பெண்கள், பட்டா கேட்டு, நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியதாவது:
நாங்கள் வசிக்கும் பகுதி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் வெங்கடாபுரம் பஞ்.,க்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. அப்பகுதி புறம்போக்கு நிலத்தில், 10க்கும் மேற்பட்ட குலாளர் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர், 60க்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம். கடந்த, 150 ஆண்டுகளுக்கு மேல், 3 தலைமுறைகளாக வசிக்கும் எங்களுக்கு, இதுவரை பட்டா வழங்கவில்லை. இது குறித்து கிராமசபா கூட்டம், நகராட்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம். கடந்த, 2011ல், எங்கள் இடங்களை பார்வையிட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறிச்சென்ற அதிகாரிகள், அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து தற்போது கலெக்டரிடம் மனு அளித்து, எங்கள் குறைகளை கூறியுள்ளோம். இதற்கும் நடவடிக்கை எடுக்கா விட்டால் எங்கள், ஆதார், வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.