/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ உலக சுற்றுச்சூழல் தினத்தில் நடப்பட்ட 10,000 மரக்கன்று உலக சுற்றுச்சூழல் தினத்தில் நடப்பட்ட 10,000 மரக்கன்று
உலக சுற்றுச்சூழல் தினத்தில் நடப்பட்ட 10,000 மரக்கன்று
உலக சுற்றுச்சூழல் தினத்தில் நடப்பட்ட 10,000 மரக்கன்று
உலக சுற்றுச்சூழல் தினத்தில் நடப்பட்ட 10,000 மரக்கன்று
ADDED : ஜூன் 06, 2025 01:12 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் நடந்தது. மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் தலைமை வகித்தார். இதில், டைட்டன் ஜூவல்லரி நிறுவனத்தின் மூலம், 10,000 மரக்கன்றுகள் ஒரே நேரத்தில் ஒரு சாதனை நிகழ்வாக, பள்ளி வளாகத்திலும், அதையொட்டிய குறுங்காடு பகுதியிலும் நடப்பட்டன.
தலைமை ஆசிரியை நர்மதாதேவி வரவேற்றார். ஓசூர் மாநகராட்சியின் கல்விக்குழு தலைவர் ஸ்ரீதர் மற்றும் திட்டக்குழு தலைவர் அசோகா ரெட்டி ஆகியோர் பேசினர். பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.கெலமங்கலம் அடுத்த, நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாட்டா கன்ஸ்ட்ரக்சன் இன்ஜினியரிங் நிறுவனம், பொது சுகாதாரத்துறை மற்றும் வனத்துறை இணைந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் மருத்துவ அலுவலர்கள் சஞ்சய், மாரியப்பன், பூவரசன், வட்டார கண்காணிப்பாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.