ADDED : ஜூன் 28, 2024 01:41 AM
ஓசூர், ஜபோச்சம்பள்ளி அடுத்த களர்பதி, கலைஞர் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார், 22. ஓசூரிலுள்ள தனியார் கல்லுாரியில் எம்.சி.ஏ., படித்து வந்தார். பேரண்டப்பள்ளியிலுள்ள ஒரு பேக்கரியில் பகுதி நேரமாக வேலையும் பார்த்துள்ளார். கடந்த, 25ல் வீட்டிலிருந்து ஓசூருக்கு சென்ற பிரவீன்குமார் மாயமானார். அவரது பெற்றோர் புகார் படி, ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
* போச்சம்பள்ளி அடுத்த வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் கலைவாணி, 27, போச்சம்பள்ளியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் பணி புரிந்துள்ளார். கடந்த, 25ல் வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது பெற்றோர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.