ADDED : ஜூலை 24, 2024 02:10 AM
ஓசூர்;தேன்கனிக்கோட்டை அருகே ஒசஹள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன், 57; தனியார் நிறுவன மேற்பார்வையாளர்; நேற்று முன்தினம் காலை நிறுவனத்திற்குள் புகுந்த இருவர், 18 கிலோ இரும்பை திருடி தப்ப முயன்றனர்.
இருவரையும் பிடித்து, தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், சாப்பரனப்பள்ளியை சேர்ந்த பெயின்டர் முனிராஜ், 32, கூலித்தொழிலாளி ராஜேந்திரன், 40, என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.