ADDED : ஜூன் 30, 2024 01:17 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 25; இவர், நேற்று முன்தினம் பல்சர் பைக்கில் சென்றுள்ளார்.
மதியம், 3:00 மணியளவில் அன்னைமடுகு கூட்ரோடு அருகில் பச்சிகானப்பள்ளி - பெல்லாரம்பள்ளி சாலையில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி பலியானார். கே.ஆர்.பி., டேம் போலீசார் விசாரிக்கின்றனர்.