/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சியால் தமிழகம் தள்ளாடுகிறது; முனுசாமி தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சியால் தமிழகம் தள்ளாடுகிறது; முனுசாமி
தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சியால் தமிழகம் தள்ளாடுகிறது; முனுசாமி
தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சியால் தமிழகம் தள்ளாடுகிறது; முனுசாமி
தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சியால் தமிழகம் தள்ளாடுகிறது; முனுசாமி
ADDED : ஜூலை 24, 2024 02:08 AM
கிருஷ்ணகிரி:''தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சியால் தமிழகம் தள்ளாடுகிறது,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி பேசினார்.மின் கட்டணத்தை உயர்த்திய, தி.மு.க., அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார்.அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில், 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மின் கட்டணம் உயர்த்தப்படாது, மாதந்தோறும் மின்கட்டணம், வீடுகள் தோறும் 3 எல்.இ.டி., பல்புகள் என அறிவித்தனர். ஒன்றாவது நடந்ததா. தமிழகத்தில், 20,000 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிப்போம் என்றனர். கேட்டால் பதில் இல்லை. மாதந்தோறும் மின் கட்டணத்தால், மக்களுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் மிச்சமாகும் என்றனர். தற்போது ஆண்டுக்கு, வழக்கமான கட்டணத்தை விட, 12,000 ரூபாய் அதிகமாக பொதுமக்கள் செலுத்துகின்றனர்.கடந்த, 2022ல் மின் தேவை பற்றாக்குறையாக, 18,000 கோடி ரூபாய் இருப்பதாக கூறி மின்கட்டணத்தை ஏற்றினர். அதன் மூலம், 14,500 கோடி ரூபாய் வருவாய் பெற்றனர். அப்படியெனில், 3,500 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம். அப்படியிருக்க, 2023 ல் ஒழுங்கு முறை ஆணையத்தில், மின் பற்றாக்குறையால், 28,000 கோடி நஷ்டம் என கூறுகின்றனர். தி.மு.க., ஆட்சியில் எந்த துறையும் முறையாக இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. 200 நாட்களில், 595 ஆதாய கொலைகள் நடந்துள்ளன. சந்துக்கடை மது விற்பனை அதிகரித்துள்ளது. தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சியால், தமிழகம் தள்ளாடுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.* ஓசூரில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், ராயக்கோட்டை சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தார்.பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், பகுதி செயலாளர் ராஜி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., அரசை கண்டித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், கவுன்சிலர்கள் குபேரன், நாராயணன், தில்ஷாத் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் மதன் உட்பட பலர் பங்கேற்றனர்.