/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மோடி பதவியேற்பையொட்டி தொழிலாளர்களுக்கு இனிப்பு மோடி பதவியேற்பையொட்டி தொழிலாளர்களுக்கு இனிப்பு
மோடி பதவியேற்பையொட்டி தொழிலாளர்களுக்கு இனிப்பு
மோடி பதவியேற்பையொட்டி தொழிலாளர்களுக்கு இனிப்பு
மோடி பதவியேற்பையொட்டி தொழிலாளர்களுக்கு இனிப்பு
ADDED : ஜூன் 11, 2024 01:52 PM
ஓசூர்: நாட்டில், 3வது முறையாக தொடர்ந்து பிரதமராக மோடி நேற்று முன்தினம் இரவு பதவியேற்று கொண்டார். இதை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சியினர், ஓசூர் அருகே குமுதேப்பள்ளியிலுள்ள அசோக் லேலண்ட் யூனிட் 2 தொழிற்சாலை முன், தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., கட்சி வேட்பாளர் நரசிம்மனுக்கு ஓட்டளித்த தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், சிந்தனையாளர்கள் பிரிவு தலைவர் அப்பன்னா, மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், இளைஞரணி மாவட்ட தலைவர் வீரேந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.