/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு
மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு
மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு
மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு
ADDED : ஜூன் 09, 2024 04:29 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஜெகதாப் கிராமத்திலுள்ள, தனியார் மாங்கூழ் தயாரிக்கும் நிறுவனத்தில், நேற்று மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு மேற்கொண்டு, தயாரிப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, பிரதமரின் 'ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொழில் திட்டம்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மா விளைச்சலை அதிகமாக கொண்டுள்ளதால், மாம்பழக்கூழ் தயாரிப்பு தொழில்களின் முன்னேற்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர், மாங்கூழ தயாரிக்கும் நிறுவனத்தில், விவசாயிகளிடமிருந்து மா கொள்முதல், முதல் நிலை சுத்திகரிப்பு பணிகள், நவீன இயந்திரம் மூலம், மாம்பழக்கூழ உற்பத்தி, டின்கள் மூலம் மாம்பழக்கூழ் சேமிப்பு, குளிர்பதன கிடங்கில் பதப்படுத்தும் பணிகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், திட்ட மேலாளர் ராமமூர்த்தி, நிறுவன நிர்வாக இயக்குனர் மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.