/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் பாசன வாய்க்காலை துார்வார கோரிக்கை பாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் பாசன வாய்க்காலை துார்வார கோரிக்கை
பாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் பாசன வாய்க்காலை துார்வார கோரிக்கை
பாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் பாசன வாய்க்காலை துார்வார கோரிக்கை
பாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கும் முன் பாசன வாய்க்காலை துார்வார கோரிக்கை
ADDED : ஜூன் 11, 2024 01:50 PM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஒவ்வோர் ஆண்டும், ஜூலை மாதத்தில் முதல்போக சாகுபடிக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பிரதான வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, பாரூர் பெரிய ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது.
கிழக்கு பிரதான வாய்க்காலில் இருந்து கீழ்குப்பம், ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி, விருப்பம்பட்டி, திருவனப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், பாரூர் ஏரியிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் செல்லும் வாய்க்கால் உள்ளது.இதில் பனங்காட்டூர் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் குடிமகன்கள் மது அருந்தி விட்டு வீசும் காலி மதுபாட்டில்கள், அதேபோல் வாய்க்காலில் கழிவுகள் நிரம்பியும் அதில், 2 அடி உயரத்திற்கு புற்கள் முளைத்தும் உள்ளது.
இந்நிலையில், முதல்போக சாகுபடி பாசனத்திற்கு, பாரூர் ஏரியில் கிழக்கு பிரதான வாய்க்காலில் தண்ணீர் திறந்தால், கடைமடை பகுதி வரை பாசனத்திற்கு தண்ணீர் செல்வது கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. இதனால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிழக்கு பிரதான வாய்க்காலில் உள்ள கழிவுகள் மற்றும் புற்களை அகற்ற, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.