/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி
சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி
சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி
சாலை விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி
ADDED : ஜூன் 30, 2024 03:59 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கே.சி.சி., நகரை சேர்ந்தவர் திருமலை, 57.
தனியார் நிறுவன உரிமையாளர்; நேற்று முன்தினம் இரவு டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில், கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்றார். சூளகிரி அருகே சாமல்பள்ளம் பகுதியில் உயர்மட்ட மேம்பால பணிகள் நடப்பதால், சர்வீஸ் சாலை அமைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. அந்த சாலையில் இரவு, 9:30 மணிக்கு சென்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திருமலை, சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.