ADDED : ஆக 07, 2024 01:42 AM
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அடுத்த ஜிங்களூரை சேர்ந்தவர் சபிகா, 19; கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் கிருஷ்ணகிரிக்கு வேலைக்கு வந்த அவர் மாயமானார்.
இது குறித்து சபிகாவின் பெற்றோர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகாரளித்தனர். அதில், ஜிங்களூரை சேர்ந்த அப்பு என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.