/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வனத்தை ஒட்டிய கிராமங்களில் ஆட்கொல்லி யானைகள் முகாம் வனத்தை ஒட்டிய கிராமங்களில் ஆட்கொல்லி யானைகள் முகாம்
வனத்தை ஒட்டிய கிராமங்களில் ஆட்கொல்லி யானைகள் முகாம்
வனத்தை ஒட்டிய கிராமங்களில் ஆட்கொல்லி யானைகள் முகாம்
வனத்தை ஒட்டிய கிராமங்களில் ஆட்கொல்லி யானைகள் முகாம்
ADDED : ஜூலை 20, 2024 06:58 AM

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி வனச்சரக பகுதிகளில் மூன்று யானைகள் நீண்ட நாட்களாக முகாமிட்டுள்ளன. வனப்பகுதி ஒட்டிய கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் முகாமிடும் யானைகள், பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
தளி அருகே பனசுமானதொட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமேஷ், 45, நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு, அப்பகுதியில் உள்ள தன் விவசாய நிலத்திற்கு சென்றார்.
அப்போது அங்கு சுற்றித்திரிந்த மூன்று யானைகளில் ஒரு யானை பரமேைஷ விரட்டி சென்று விவசாய நிலத்திலேயே தாக்கிக் கொன்றது.
சடலத்தை எடுக்க விடாமல் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, நேற்று காலை ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அதே மூன்று ஆட்கொல்லி யானைகள், பனசுமானதொட்டி, சொல்லேபுரம் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை ஒட்டி சுற்றி திரிந்தன.
இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து வீடுகளுக்குள் தஞ்சமடைந்தனர்.