/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மீண்டும் சிறுத்தை வனத்துறையினர் எச்சரிக்கை மீண்டும் சிறுத்தை வனத்துறையினர் எச்சரிக்கை
மீண்டும் சிறுத்தை வனத்துறையினர் எச்சரிக்கை
மீண்டும் சிறுத்தை வனத்துறையினர் எச்சரிக்கை
மீண்டும் சிறுத்தை வனத்துறையினர் எச்சரிக்கை
ADDED : ஜூன் 07, 2024 07:51 PM

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, சனத்குமார் காட்டாறு பகுதி, இஸ்மாம்பூர், அடவிசாமிபுரம் போன்ற பகுதியில் கடந்தாண்டு செப்., மாதம் சிறுத்தை ஒன்று சில நாய்களை அடித்து கொன்றது. எனினும், சிறுத்தையை யாரும் பார்க்காததால், வேறு வனப்பகுதிக்கு சிறுத்தை சென்றிருக்கலாம் என, வனத்துறையினர் கருதினர். இந்நிலையில், மீண்டும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் கண்டறிந்தனர்.
இதையடுத்து, எட்டு கண்காணிப்பு கேமராக்களை அப்பகுதியில் பொருத்தி, மோசமான நிலையில் இருந்த கூண்டை மீண்டும் சீரமைத்து, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர்.
'மாலை, இரவு நேரங்களில் வீட்டில் இருந்து தனியாக வெளியே செல்ல வேண்டாம்' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.