Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கெம்பேகவுடா 515 வது ஜெயந்தி விழா

கெம்பேகவுடா 515 வது ஜெயந்தி விழா

கெம்பேகவுடா 515 வது ஜெயந்தி விழா

கெம்பேகவுடா 515 வது ஜெயந்தி விழா

ADDED : ஜூலை 01, 2024 04:13 AM


Google News
ஓசூர்: ஓசூரில், கெம்பேகவுடாவின், 515வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை வடிவமைத்தவர் கெம்பேகவுடா. பெங்களூருவை சுற்றிலும் ஏரிகள், கோவில்களை அமைத்தார். சமூக சீர்திருத்தவாதியாக விளங்கிய இவரது, 515வது ஜெயந்தி விழா, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.

தமிழ்நாடு ஒக்கலிகரா சங்க, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கோபாலப்பா தலைமை வகித்தார். ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, சங்க துணைத்தலைவர் நரசிம்மன், பேலகொண்டப்பள்ளி சீனிவாசமூர்த்தி உட்பட பலர், கெம்பேகவுடாவின் சாதனைகள் குறித்து பட்டியலிட்டு, அவரது உருவ சிலைக்கு மலர் துாவி பூஜை செய்தனர்.

மேலும், கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர். 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சேலத்தை சேர்ந்த கண் பார்வையற்ற செல்லப்பா - கிருத்திகா தம்பதியின் மகன் ஷஸ்வத், 6, மற்றும் கால் செயலிழந்த மாற்றுத்திறனாளியான கர்நாடகா மாநிலம், ஆனைக்கல்லை சேர்ந்த ரமேஷின் மகள்கள் லட்சுமி, சரஸ்வதி ஆகியோர், கர்நாடகா மாநிலம், மாண்டியா அருகே உள்ள ஆதி சுஞ்சனகிரி மடத்தில் தங்கி, இலவசமாக கல்வி கற்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க., வக்கீல் பிரிவு மேற்கு மாவட்ட செயலாளர் நஞ்சேகவுடா, நல்லுார் பஞ்., தலைவர் சாந்தா வீரபத்திரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us