/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 10 ஆண்டுகளுக்கு பின் நடந்த கன்னியம்மன் கோவில் திருவிழா 10 ஆண்டுகளுக்கு பின் நடந்த கன்னியம்மன் கோவில் திருவிழா
10 ஆண்டுகளுக்கு பின் நடந்த கன்னியம்மன் கோவில் திருவிழா
10 ஆண்டுகளுக்கு பின் நடந்த கன்னியம்மன் கோவில் திருவிழா
10 ஆண்டுகளுக்கு பின் நடந்த கன்னியம்மன் கோவில் திருவிழா
ADDED : ஜூலை 17, 2024 06:47 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அருகே, 10 ஆண்டுகளுக்கு பின் நடந்த கன்னியம்மன் கோவில் திருவிழாவில், 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டி அங்காளம்மன் கோவில் அருகில், கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்துவது வழக்கம். இந்நிலையில், கொரோனா தொற்றால் கடந்த முறை திருவிழா கொண்டாடப்படாத நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று திருவிழா நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டும், தீ மிதித்தும், பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இது குறித்து, ஊர் பொதுமக்கள் கூறியதாவது:
கன்னியம்மன் திருவிழா, பங்காளிகள், உறவின் முறைகள், பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழா. திருவிழாவை நடத்துவதன் மூலம் பருவமழை பெய்து, விவசாயம் செழிக்கவும், ஊர்மக்கள், உறவினர்கள் நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளோடு வாழவும், திருவிழாவை கொண்டாடுகிறோம். கொரோனா தொற்றால் கடந்த முறை திருவிழா நடத்த முடியவில்லை. தற்போது இத்திருவிழாவில், எங்கள் அண்ணன், தம்பிகள், பங்காளி உறவுகள் என, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்டுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.