/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாநகராட்சி பகுதிகளில் மேயர், துணை மேயர் ஆய்வு மாநகராட்சி பகுதிகளில் மேயர், துணை மேயர் ஆய்வு
மாநகராட்சி பகுதிகளில் மேயர், துணை மேயர் ஆய்வு
மாநகராட்சி பகுதிகளில் மேயர், துணை மேயர் ஆய்வு
மாநகராட்சி பகுதிகளில் மேயர், துணை மேயர் ஆய்வு
ADDED : ஜூலை 24, 2024 02:07 AM
ஓசூர்:ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.பி.எம்., காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆனந்த் நகரில் செயல்படும் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் ஆகியவற்றில், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா இணைந்து ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்குள்ள பதிவேடுகள், ஆவணங்களை பார்வையிட்டனர். பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை சரி செய்து தர உத்தரவிட்டனர். மாநகர நல அலுவலர் பிரபாகரன், மண்டல குழு தலைவர் ரவி, கவுன்சிலர்கள் சென்னீரப்பா, பாக்கியலட்சுமி, மம்தா, யஷஸ்வினி, தி.மு.க., பகுதி செயலாளர் திம்மராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.