/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காதல் திருமணம் செய்த விடுதி ஓனர் கொலை; கூலிப்படையுடன் மாமனார், மாமியார் கைது காதல் திருமணம் செய்த விடுதி ஓனர் கொலை; கூலிப்படையுடன் மாமனார், மாமியார் கைது
காதல் திருமணம் செய்த விடுதி ஓனர் கொலை; கூலிப்படையுடன் மாமனார், மாமியார் கைது
காதல் திருமணம் செய்த விடுதி ஓனர் கொலை; கூலிப்படையுடன் மாமனார், மாமியார் கைது
காதல் திருமணம் செய்த விடுதி ஓனர் கொலை; கூலிப்படையுடன் மாமனார், மாமியார் கைது
ADDED : ஜூலை 22, 2024 12:50 AM

ஓசூர் : ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் கொண்டவார்பள்ளியை சேர்ந்தவர் கலுாரி அசானய்யா, 26.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தனியார் கல்லுாரி அருகே காமராஜ் நகரில், மூன்று மாடி கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, ஆண்கள் தங்கும் விடுதி நடத்தி வந்தார்.கடந்த 5ல் விடுதியில் கழுத்து அறுக்கப்பட்டு, வயிற்றில் காயங்களுடன் இறந்து கிடந்தார். ஹட்கோ போலீசார் விசாரித்தனர்.
கொலையில் தொடர்புடையதாக, கலுாரி அசானய்யாவின் மாமனாரான, ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், காதர் வலி, 45, மாமியார் பீரம்மா, 45, நந்தியால் மாவட்டம், தேவநகரை சேர்ந்த மாதேவி, 35, அவரது கள்ளக்காதலன் சீனிவாசலு, 38, கூலிப்படையினர் உட்பட எட்டு பேரை, ஹட்கோ போலீசார் நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
கலுாரி அசானய்யா, காதர்வலியின் மகளான பீராம்பியை, 21, மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்தார். இது, பீராம்பியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. கலுாரி அசானய்யா ஓசூர் விடுதிக்கு வந்ததால், தந்தை வீட்டில் பீராம்பி வசித்தார்.
இதனால், கலுாரி அசானய்யாவை கொலை செய்து விட்டு, மகளுக்கு வேறு திருமணம் செய்ய, காதர்வலி, பீரம்மா, அவரது தங்கை மாதேவி ஆகியோர் முடிவு செய்து, கூலிப்படையை நாடியுள்ளனர்.
அவர்களுக்கு, 3.50 லட்சம் ரூபாயை, மாதேவியின் கள்ளக்காதலன் சீனிவாசலு வழங்கினார். அதன்படி, கடந்த 4ம் தேதி மதியம் விடுதிக்குள் சென்ற கூலிப்படையினர், கலுாரி அசானய்யாவை கொன்று விட்டு ஆந்திராவிற்கு தப்பினர்.
'சிசிடிவி' கேமரா பதிவின் அடிப்படையில், கொலை செய்த பண்டி சேகர், வினோத்குமாரை பிடித்து விசாரித்தபோது, கொலைக்கான காரணம் தெரியவந்தது. கொலையில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.