/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கோவையில் தி.மு.க., முப்பெரும் விழா கட்சியினர் திரளாக பங்கேற்க அழைப்பு கோவையில் தி.மு.க., முப்பெரும் விழா கட்சியினர் திரளாக பங்கேற்க அழைப்பு
கோவையில் தி.மு.க., முப்பெரும் விழா கட்சியினர் திரளாக பங்கேற்க அழைப்பு
கோவையில் தி.மு.க., முப்பெரும் விழா கட்சியினர் திரளாக பங்கேற்க அழைப்பு
கோவையில் தி.மு.க., முப்பெரும் விழா கட்சியினர் திரளாக பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூன் 14, 2024 12:58 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, 40 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தமிழக வெற்றிக்கு, கட்சியை வழிநடத்தி சென்ற முதல்வருக்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா நாளை (சனிக்கிழமை) மாலை, 4:00 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது. இதில் தமிழகத்தின், 40 புதிய எம்.பி.,க்களும் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.