Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம் போக்குவரத்து நெரிசலை தடுக்க யோசனை

ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம் போக்குவரத்து நெரிசலை தடுக்க யோசனை

ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம் போக்குவரத்து நெரிசலை தடுக்க யோசனை

ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம் போக்குவரத்து நெரிசலை தடுக்க யோசனை

ADDED : ஜூலை 24, 2024 10:36 PM


Google News
ஓசூர்:ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டத்தில், போக்குவரத்து நெரிசலை தடுக்க, மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி நகரமைப்பு குழு கூட்டம், தலைவர் அசோகாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. நகரமைப்பு செயற்பொறியாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அங்கீகரித்த மனைப்பிரிவுகளில் பூங்காவிற்கு ஒதுக்கிய இடங்களை பாதுகாக்க வேண்டும். தாலுகா அலுவலக சாலை, எம்.ஜி.,ரோடு, நேதாஜி ரோட்டில், வாகனங்களை ஒழுங்குப்படுத்த, போக்குவரத்து போலீசாரை கேட்டுக் கொள்வது; எம்.ஜி.,ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை வேறிடத்திற்கு மாற்றி, அரசு இடத்தில் நிரந்தர சார்பதிவாளர் அலுவலகம் கட்ட, அரசுக்கு பரிந்துரை செய்வது; ஆக்கிரமிப்பை தடுக்க, அரசு புறம்போக்கு மற்றும் ஏரிகளில் முள்வேலி அமைப்பது. ஜூஜூவாடியில், சேதமாகி, குத்தகை புதுப்பிக்கப்படாமல் உள்ள, ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமான இடத்திலுள்ள கட்டடங்களை அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.

நகரமைப்பு குழு தலைவர் அசோகாரெட்டி பேசுகையில், ''ஓசூர் - பாகலுார் சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, ஜி.ஆர்.டி., பகுதியில் பட்டர்பிளை மேம்பாலம் அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடைகளை அகற்றி, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,'' என்றார்

கவுன்சிலர் குபேரன் பேசுகையில், ''நகரமைப்பு கூட்டத்தை, 2 மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும். மாநகராட்சியில் உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. பூங்காவை சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு மனமில்லை,'' என்றார்.

கவுன்சிலர்கள் சிவராம், புஷ்பா, மம்தா, மஞ்சம்மாள், நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் மலர்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us