ADDED : ஜூன் 08, 2024 02:35 AM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த மெய்யாண்டப்பட்டியை சேர்ந்தவர் பிரியா, 28; அனுமந்தீர்த்தம், பாவக்கல் சாலையில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவரது கணவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இந்நிலையில் பிரியாவுக்கு மறுமணம் செய்ய அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர்.
இதில், விருப்பமில்லாத பிரியா, மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த, 1 மாலை, கடையிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து பிரியாவின் தாய் நேற்று முன்தினம் ஊத்தங்கரை போலீசில் அளித்த புகார்படி போலீசார்
விசாரிக்கின்றனர்.