/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.8.59 லட்சம் மோசடி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.8.59 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.8.59 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.8.59 லட்சம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.8.59 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 09, 2024 04:31 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சரவணன், 46, தனியார் நிறுவன ஊழியர்; இவரது டெலிகிராம் பக்கத்தில் கடந்த மார்ச், 23 ல் ஒரு மெசேஜ் வந்தது. அதில், ஒரு குறிப்பிட்ட நிறுவன பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி, அதற்கான, 'மொபைல் ஆப் லிங்க்' ஒன்றையும் அனுப்பி இருந்தனர். அதை நம்பி, சிறிதளவு முதலீடு செய்த சரவணன் வங்கி கணக்கிற்கு லாபத்துடன் முதலீட்டு தொகை வந்தது. இதையடுத்து தன்னிடமிருந்த, 8.59 லட்சம் ரூபாயை, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார். அதன்பின் அவரது தொகை, லாபத்துடன் இணையதள பக்கத்தில் காண்பித்த போதும், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. அவரை தொடர்பு கொண்ட எண்ணையும் அவரால் தொடர்பு கொள்ள முடிய
வில்லை. அதே நேரத்தில், அந்த இணையதள பக்கமும் முடங்கியது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரவணன், நேற்று முன்தினம் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார்
விசாரிக்கின்றனர்.