/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ யானை கூட்டம் தாக்கியதில் விவசாயி பலி யானை கூட்டம் தாக்கியதில் விவசாயி பலி
யானை கூட்டம் தாக்கியதில் விவசாயி பலி
யானை கூட்டம் தாக்கியதில் விவசாயி பலி
யானை கூட்டம் தாக்கியதில் விவசாயி பலி
ADDED : ஜூலை 18, 2024 09:43 PM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த பனசுமானதொட்டியை சேர்ந்தவர் பரமேஷ், 45, விவசாயி. இவர், தன் தோட்டத்திற்கு நேற்று காலை, 6:00 மணிக்கு சென்றார். அப்போது ஜவளகிரி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று யானைகள் அவரை துரத்திச் சென்று, மிதித்து கொன்றன. அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவல் படி, ஜவளகிரி வனத்துறையினர் மற்றும் தளி போலீசார், பரமேஷ் உடலை மீட்டனர்.
அப்போது அவர்களிடம் அப்பகுதி மக்கள், இப்பகுதியில் யானைகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, சோலார் மின்வேலி அமைக்க கேட்டும் நடவடிக்கை இல்லை என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரும், வனத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவர்களை சமாதானப்படுத்தினர். யானை தாக்கி இறந்த பரமேஷின் குடும்பத்திற்கு, முதல்கட்டமாக, 50,000 ரூபாய் இழப்பீட்டை வனத்துறையினர் வழங்கினர்.