/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் குறிஞ்சி நகரில் 4 மாதமாக குடிநீர் 'கட்' வீட்டு வசதி வாரிய அலுவலகம் முற்றுகை ஓசூர் குறிஞ்சி நகரில் 4 மாதமாக குடிநீர் 'கட்' வீட்டு வசதி வாரிய அலுவலகம் முற்றுகை
ஓசூர் குறிஞ்சி நகரில் 4 மாதமாக குடிநீர் 'கட்' வீட்டு வசதி வாரிய அலுவலகம் முற்றுகை
ஓசூர் குறிஞ்சி நகரில் 4 மாதமாக குடிநீர் 'கட்' வீட்டு வசதி வாரிய அலுவலகம் முற்றுகை
ஓசூர் குறிஞ்சி நகரில் 4 மாதமாக குடிநீர் 'கட்' வீட்டு வசதி வாரிய அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூன் 08, 2024 02:36 AM
ஓசூர்: ஓசூர் குறிஞ்சி நகரில், 4 மாதமாக குடிநீர் வினியோகம் செய்யாததால், வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோகுல் நகர் பின்புறம், குறிஞ்சி நகர் உள்ளது. இங்கு, 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்
பகுதி மாநகராட்சி வசம் முறையாக ஒப்படைக்கப்படாத
காரணத்தால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தான் இதுவரை இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்கிறது. இங்குள்ள, 3 போர்வெல்கள் நீரின்றி வறண்டுள்ளன.
வீட்டு வசதி வாரியம் மாற்று ஏற்பாடு செய்யாத காரணத்தால் கடந்த, 4 மாதங்களாக குடிநீரின்றி மக்கள் தவிக்கின்றனர். குறிஞ்சி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மாதேஷ் தலைமையில், பொதுமக்கள் சமீபத்தில் வந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என கூறி அனுப்பி விட்டனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடிநீர் வினியோகம் செய்யாத நிலையில், 1,200 ரூபாய் வரை செலவு செய்து, டிராக்டரில் தண்ணீர் வாங்கி மக்கள் பயன்படுத்துகின்றனர்.
குடிநீர் மட்டுமின்றி, சரியான சாலை, தெருவிளக்கு போன்ற எந்த அடிப்படை வசதிகள் இல்லாத போதும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்தினரிடம் இருந்தும், 600 ரூபாயை பராமரிப்பு கட்டணமாக வசூல் செய்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குடியிருப்போர் நலச்சங்க தலைவர் மாதேஷ் தலைமையில், நேற்று காலை ஓசூர் பாகலுார் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இருந்தும் மக்களை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக கூறி, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, மக்கள் கலைந்து சென்றனர்.