/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மத்திய அரசை கண்டித்து கி.கிரியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம் மத்திய அரசை கண்டித்து கி.கிரியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து கி.கிரியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து கி.கிரியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து கி.கிரியில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 28, 2024 04:12 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை எதிரில், மத்திய பட்ஜெட்டை கண்டித்து கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாவட்ட அவைத்த-லைவர் தட்ரஹள்ளி நாகராஜ் முன்னிலை வகித்தார்.
இதில், தி.மு.க., மாநில மகளிர் அணி செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான ஹெலன் பேசுகையில், ''மத்திய பட்ஜெட் என்-பது, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசுக்கு நெருக்கமான மாநிலங்க-ளுக்கு திட்டங்களும், தமிழகத்தை வஞ்சித்தும் அறிவிக்கப்பட்டி-ருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், மூன்று தொகுதியில் அ.தி.மு.க., வென்றுள்ளது. ஆனால் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் அனைவ-ருக்கும் செல்கிறது. ஆனால் மத்திய பா.ஜ., அரசு மட்டும் தமி-ழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கிறது. மத்திய அரசு, பாராமுகமாக இருப்பது குறித்து அனைவரும் உணர வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்-டன. முன்னாள் மாவட்ட செயலர் செங்குட்டுவன், நகர செயலர் நவாப், தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதாநவாப், பொதுக்-குழு உறுப்பினர் அஸ்லம், தி.மு.க., நிர்வாகிகள் அன்பரசன், சீனி-வாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூரிலும் போராட்டம்
தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்ததாக கூறி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாநகர மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழகம் சந்தித்த இரு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றுக்கு நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்-கைகளை புறக்கணித்ததாகவும், தமிழகத்தை பட்ஜெட்டில் வஞ்-சித்ததாகவும் கூறி, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசை கண்-டித்து கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட அவைத்த-லைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்-னீரப்பா, பகுதி செயலர்கள் திம்மராஜ், ராமு, மாவட்ட பொரு-ளாளர் சுகுமார், ஒன்றிய செயலர்கள் கஜேந்திரமூர்த்தி, நாகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.