Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கட்சி பாகுபாடின்றி அடிப்படை வசதி மேற்கொள்ள கோரிக்கை

கட்சி பாகுபாடின்றி அடிப்படை வசதி மேற்கொள்ள கோரிக்கை

கட்சி பாகுபாடின்றி அடிப்படை வசதி மேற்கொள்ள கோரிக்கை

கட்சி பாகுபாடின்றி அடிப்படை வசதி மேற்கொள்ள கோரிக்கை

ADDED : ஆக 06, 2024 01:32 AM


Google News
ஓசூர், ஓசூர் மாநகராட்சி கமிஷனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்று கொண்டார். அவரை, மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நேற்று மதியம் சந்தித்து பேசினர். அப்போது, ஓசூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. மோசமான நிலையில் மாநகராட்சி இதுவரை இருந்துள்ளது.

எனவே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, கட்சி பாகுபாடின்றி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், கவுன்சிலர்கள் குபேரன், தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான், முருகம்மாள் மதன், மஞ்சுநாத், ஸ்ரீதரன், அசோகா உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us