/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ., மாரடைப்பால் உயிரிழப்பு பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ., மாரடைப்பால் உயிரிழப்பு
பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ., மாரடைப்பால் உயிரிழப்பு
பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ., மாரடைப்பால் உயிரிழப்பு
பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ., மாரடைப்பால் உயிரிழப்பு
ADDED : ஜூலை 21, 2024 10:56 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி சோமார்பேட்டையை சேர்ந்தவர் ரவிக்குமார், 56; கடந்த, 1986ல் போலீசாக பணியில் சேர்ந்தார். சில ஆண்டுக்கு முன் எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற்றார். சூளகிரி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய நிலையில், ஓசூர் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு பணியிலிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மீண்டும் ஏற்பட்ட மாரடைப்பால், பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, செல்லும் வழியில் இறந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.