ADDED : ஜூன் 08, 2024 03:02 AM
கிருஷ்ணகிரி: திருப்பத்தூர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த சிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 19.
வேலூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம்., படித்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்தவர் கவுதம், 19; பி.இ., முதலாமாண்டு மாணவர். நண்பர்களான இவர்கள், ஒரு வேலையாக கடந்த, 5ல், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் கிருஷ்ணகிரி வந்து வீடு திரும்பியுள்ளனர். பைக்கை சந்தோஷ்குமார் ஓட்டியுள்ளார். மதியம், 3:00 மணியளவில், தண்டேக்குப்பம் அருகில் கிருஷ்ணகிரி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் இறந்தார். படுகாயங்களுடன் கவுதம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.