/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு
கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு
கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு
கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு
ADDED : ஜூலை 22, 2024 12:10 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், தி.மு.க., அரசு பதவியேற்ற கடந்த, 3 ஆண்டுகளில், 3வது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்யும்.
தி.மு.க., அரசை கண்டித்து, கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., அசோக்குமார் தலைமையில், நாளை (ஜூலை 23) காலை, 10:00 மணிக்கு, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில், நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.