/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஜூலை 23, 2024 09:46 PM
ஓசூர்:கெலமங்கலம் அருகே, விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த சின்னட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து, 30, தனியார் நிறுவன ஊழியர்; கடந்த, 18 இரவு, டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில், கெலமங்கலம் - ஓசூர் சாலையில் சென்றார். அக்கொண்டப்பள்ளி அருகே இரவு, 11:30 மணிக்கு, அவ்வழியாக வந்த மாருதி ஆம்னி வேன், பைக் மீது மோதியது. தலையில் படுகாயமடைந்த மாரிமுத்து, ஓசூர் அரசு மருத்துவமனையிலும் பின் மேல்சிகிச்சைக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க மனைவி பாஞ்சாலி, 20, மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர். அதன்படி மாரிமுத்துவின் இரு சிறுநீரகங்கள் சேலம், கோவை அரசு மருத்துவமனைக்கும், இதயம், சென்னைக்கும், கல்லீரல், ஈரோடு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.
மாரிமுத்து-வின் உடலுக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பூவதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
உடல் உறுப்புகள் தானம் செய்த மாரிமுத்துவிற்கு, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.