/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பர்கூர் ஜவுளி கிடங்கில் பயங்கர தீ விபத்து பர்கூர் ஜவுளி கிடங்கில் பயங்கர தீ விபத்து
பர்கூர் ஜவுளி கிடங்கில் பயங்கர தீ விபத்து
பர்கூர் ஜவுளி கிடங்கில் பயங்கர தீ விபத்து
பர்கூர் ஜவுளி கிடங்கில் பயங்கர தீ விபத்து
ADDED : ஜூன் 17, 2024 11:56 PM

கிருஷ்ணகிரி : பர்கூரிலுள்ள ஒரு ஜவுளி கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள், பொருட்கள் எரிந்து நாசமாகின.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில், ஜெகதேவி செல்லும் சாலையில் தனியார் திருமணம் மண்டபம் உள்ளது. இதை கடந்த ஒரு வருடத்திற்கு முன், சின்ன பர்கூரை சேர்ந்த வடிவேல், 41, என்பவர் வாடகைக்கு எடுத்து, ஜவுளி கிடங்காக பயன்படுத்தி வந்தார்.
இங்கிருந்து கடைகள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு துணிகள் மொத்தமாக அனுப்புவது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு மண்டபத்திலிருந்து கரும்புகை வந்த நிலையில், சிறிது நேரத்தில் தீப்பற்றி, அதிகளவில் புகை வெளியேறியது.
மின் வாரியத்தினர் அசம்பாவிதங்களை தவிர்க்க, அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். பர்கூர் தீயணைப்பு துறை வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
ஆனாலும் மண்டபம் முழுதும் இருந்த துணிகள் எரிந்ததால், தீ கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, பர்கூர், ஓசூரிலிருந்து, ஐந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை, 4:00 மணியை தாண்டியும் தீயை அணைக்கும் பணி, 16 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. மின்கசிவால் தீ விபத்தா அல்லது வேறேதும் காரணமா என்பது குறித்தும் பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.