/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ராசிபுரம் அரசு கலை கல்லுாரியில் 60 சதவீத இடங்கள் நிரம்பின ராசிபுரம் அரசு கலை கல்லுாரியில் 60 சதவீத இடங்கள் நிரம்பின
ராசிபுரம் அரசு கலை கல்லுாரியில் 60 சதவீத இடங்கள் நிரம்பின
ராசிபுரம் அரசு கலை கல்லுாரியில் 60 சதவீத இடங்கள் நிரம்பின
ராசிபுரம் அரசு கலை கல்லுாரியில் 60 சதவீத இடங்கள் நிரம்பின
ADDED : ஜூன் 15, 2024 09:05 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார் கேட் அரசு கல்லுாரியில், 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை சிறப்பு ஒதுக்கீட்டுடன், கடந்த, 30ல் தொடங்கியது.
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், அன்றே கலந்தாய்வு முடிந்தது. மாற்றுத்திறன் மாணவர்கள், 12, முன்னாள் ராணுவத்தினர், 1, என்.சி.சி., 1, விளையாட்டு பிரிவில், 13 என மொத்தம், 27 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர்.
முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன், 10ல் தொடங்கி, இன்று வரை நடக்கிறது. இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 24ல் தொடங்கி, 29 வரை நடக்கிறது. இதுகுறித்து தகவலை, இக்கல்லுாரிக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல், வாட்ஸாப், கைப்பேசி மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட கலந்தாய்வில், மொத்தம் காலியாக உள்ள, 955 இடங்களில், நேற்று வரை, 562 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இன்று ஒரு நாள் மீதியுள்ள நிலையில், 58.8 சதவீதம் இடங்கள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.