/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தனியார் ஊழியருக்கு கத்திக்குத்து வாலிபர்கள் 3 பேருக்கு 'காப்பு' தனியார் ஊழியருக்கு கத்திக்குத்து வாலிபர்கள் 3 பேருக்கு 'காப்பு'
தனியார் ஊழியருக்கு கத்திக்குத்து வாலிபர்கள் 3 பேருக்கு 'காப்பு'
தனியார் ஊழியருக்கு கத்திக்குத்து வாலிபர்கள் 3 பேருக்கு 'காப்பு'
தனியார் ஊழியருக்கு கத்திக்குத்து வாலிபர்கள் 3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 06, 2024 03:53 AM
ஓசூர்: பென்னாகரம் அடுத்த போரூரை சேர்ந்தவர் சேது, 25; ஓசூர் பேடரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; கடந்த, 3 இரவு, 7:00 மணிக்கு, சேது, அவரது நண்பர் வல்லரசு, 23, ஆகியோர், கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளியிலுள்ள மதுபான கடையில் மது அருந்தினர்.
அப்போது, மற்றொரு தரப்பினருடன் தகராறு ஏற்பட்டது. அதன் பின் சேது, வல்லரசு ஆகியோர் பைக்கில், அறைக்கு திரும்பினர். ஓசூர் ஜூஜூவாடி வனத்துறை சோதனைச்சாவடி அருகே வரும் போது, மொபட்டில் பின்தொடர்ந்து வந்து தகராறு செய்த தரப்பினர், சேதுவை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் குத்தினர்.இதில் முதுகில் படுகாயமடைந்த சேது, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், ஓசூர் கும்பாரப்பேட்டை சுண்ணாம்பு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி பர்வேஸ், 21, போச்சம்பள்ளி அடுத்த எம்.ஜி.,ஹள்ளியை சேர்ந்த தேவேந்திரன், 24, ராயக்கோட்டை ஹட்கோவை சேர்ந்த வினோத்குமார், 26, ஆகியோர், சேதுவை கத்தியால் குத்தியது தெரிந்தது. அவர்களை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். கைதான பர்வேஸ் மீது, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், போக்சோ வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.